கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து லாரி காட்டுக்குள் பாய்ந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.