ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன் தனது வாக்கினை கொசுவண்ண வீதியிலுள்ள BVB குழந்தைகள் பள்ளியில் செலுத்தினார். அவருடன் மனைவி அமுதா, மகள் ருசிதா ஸ்ரீ, மகன் மெகர்வின் ஸ்ரீ ஆகியோரும் வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் சந்திரகுமார், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியோடும், தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துக்களுடனும், அமைச்சர் சு.முத்துசாமி வழிகாட்டுதலோடும் இந்த இடைத்தேர்தலில் சந்தித்துள்ளேன்.
இந்த இடைத்தேர்தலில் பொறுத்த வரையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உதயசூரியன் சின்னம் மிகப்பெரிய வெற்றியை பெறும். அந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கப் போவது கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்களே. இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும். தற்போது வாக்குப்பதிவு துவங்கி நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் நான் எனது வாக்குச்சாவடியில் என்னுடைய வாக்கை பதிவு செய்துவிட்டு வந்திருக்கின்றேன். இந்த தேர்தலில் இந்த கிழக்கு தொகுதியில் இருக்கின்ற மக்கள் அனைவரும் உங்களுடைய வாக்குகளை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என உங்களையெல்லாம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.