TN: மாடியில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு

80பார்த்தது
TN: மாடியில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ஆயிஷா (19) தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த மார்ச். 12-ல் கல்லூரியின் 2வது தளத்தில் இருந்து கீழே குதித்தார். போலீசார் விசாரணையில், ஆயிஷாவின் சகோதரி விபத்தில் உயிரிழந்ததும், அவரது இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாத ஆயிஷா, தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரியவந்தது. இதனிடையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆயிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.