வாடிக்கையாளர்களின் புகார்களை தீர்க்க வங்கிகள் AI தொழில்நுட்பத்தை பின்பற்ற RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “2023-2024 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள 95 வணிக வங்கிகள் 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் புகார்களை பெற்றுள்ளன, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் ATM-ல் ஏற்படும் சிக்கல்கள், கட்டண பரிவர்த்தனைகளில் ஏற்படும் தவறுகளை AI மூலம் கண்டறியலாம்" என்றார்.