மாணவன் கத்தியால் குத்திக்கொலை: கொலையாளி தற்கொலை

65பார்த்தது
மாணவன் கத்தியால் குத்திக்கொலை: கொலையாளி தற்கொலை
கேரளாவின் கொல்லத்தில் கல்லூரி மாணவனை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். காரில் தப்பிச் சென்ற குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்டவர் பாத்திமா மாதா கல்லூரி மாணவரான ஃபேபின் ஜார்ஜ் என்பதை போலீசார் உறுதி செய்தனர். கொலை செய்தவர் தேஜஸ் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. காதல் விவகாரத்தில் மாணவனை கொலை செய்துவிட்டு கொலையாளி தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி