டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்று கைதான பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 798 பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அண்மையில் தெரிவித்தது. இதனை கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை நேற்று பாஜகவினர் முற்றுகையிட முயன்றனர். எழும்பூரிலிருந்து பேரணியாக செல்ல முயன்ற ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், 798 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.