ஈரோடுகஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்கவாசல்வழியாகச் சென்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் ஈரோடு, ஜன. 10-வைகுண்டஏகாதசி விழாவை முன்னிட்டு ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல்திறக்கப்பட்டது. ஆயிரகணக்கான பக்தர்கள்சாமி தரிசனம் முடித்து அதன் வழியாக சென்றனர். வைகுண்டஏகாதசி விழா ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் கடந்த டிசம்பர் 31ம் தேதி தொடங்கியது. அன்று தொடங்கி நேற்றுவரை பகல் பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, நேற்று மாலை 6. 30 முதல் 9 மணி வரை கஸ்தூரி அரங்கநாதர் மோகினி அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்துவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி பாடப்பட்டது. இதையடுத்து அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் நடை திறக்கபட்டது.