ஈரோடு இடைத்தேர்தல்; செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்

78பார்த்தது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜகோபால் சுன்கரா காலை 6.50 மணிக்கு சம்பத் நகர் அம்மன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி வந்து வரிசையில் நின்று காத்திருந்து வாக்கு சாவடி எண்- 95 ல் தனது வாக்கினை செலுத்தினார். முன்னதாக வரிசையில் நின்ற மாவட்ட ஆட்சியரை வாக்காளர் சந்தித்து கேட்பரிஸ் சாக்லேட் வழங்கி வாழ்த்து தெரிவித்து சென்றார். அவருக்கு முன்னதாக மாற்றுத்திறனாளி நான்கு சக்கர வாகனத்தில் வந்து தனது வாக்கினை செலுத்தினார் தொடர்ந்து இரண்டாவது வாக்கினை மாவட்ட ஆட்சியர் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்புடைய செய்தி