ஈரோடு: பொதுமக்கள் மீது மோதும் கார்; பதபதைக்கும் சிசிடிவி காட்சி

80பார்த்தது
ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது காரில் ஈரோட்டில் இருந்து பெருந்துறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தனியார் உணவகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த பெண், சிறுவர் உட்பட 5க்கும் மேற்பட்டவர்கள் மீது மோதியது. 

இதில் காயமடைந்த ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த முதியவர் ராஜ்குமார், கெளதமன், திருநாவுக்கரசு ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்தை சரிசெய்தனர். 

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிவக்குமார் ஓட்டி வந்த காரில் இருந்த கால்மிதியடி ஸ்டீரிங், பிரேக் பகுதியில் சிக்கிக்கொண்டதால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த மற்றும் திருப்ப முடியாமல் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியது தெரியவந்தது. 

இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் வேகமாக கார் வந்து மோதும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. மேலும் இந்த சிசிடிவி காட்சி கொண்டு தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி