பவானி - Bhavani

ஈரோடு: விவசாயிக்கு பாதை விட மறுத்த ஊர் மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (56), இவருக்கு அருகே உள்ள கூலிவலசு கிராமத்தில் சொந்தமாக 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு செல்வதற்கு என 20 அடி அகலம் உள்ள சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு வண்டி பொதுப்பாதை உள்ளது. இந்த நிலையில் இந்த பொதுப்பாதையை அப்பகுதி கிராம மக்கள் சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விவசாய நிலத்திற்கு செல்ல முடியாமல் அர்ஜுனன் இருந்துள்ளார். இதன் காரணமாக வண்டி பொதுப்பாதையை மீட்டுத் தருமாறு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து உயர்நீதிமன்றம் வண்டி பாதையை எடுத்துத் தரக்கோரி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததன் காரணமாக மீண்டும் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு அர்ஜுனன் தொடர்ந்தார். இதையடுத்து மீண்டும் நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை மீட்டுத் தர உத்தரவிட்டது. இதையடுத்து அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் பவானி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கூலிவலசு கிராமத்திற்கு சென்றனர். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீடியோஸ்


ஈரோடு