பவானி - Bhavani

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 169 வேளாண் விற்பனையாளர் கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பில் 143 வேளாண் விற்பனையாளர் கடன் சங்கங்களும், மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1196 ரேஷன் கடைகளில் 850 ரேஷன் கடைகள் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இயங்கி வருகிறது. இதில் பணியாற்றி வரும் 425 பெண் ஊழியர்கள் உள்பட 820 கூட்டுறவு சங்க பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஈரோடு அருகே சித்தோட்டில் நடைபெற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான கூட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மேசப்பன் கூறியதாவது, நியாய விலை கடைகளில் அந்தந்த பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அனுப்புவதற்கு மாறாக பல்வேறு பொருட்களையும் அனுப்பி அதனை விற்பனை செய்யுமாறும் அதற்கு இலக்கையும் நிர்ணயிக்கிறார்கள். இந்த பொருட்களை விற்பனை செய்யாத நிலையில் அவை காலாவதி ஆகிவிட்டால் அதற்கான அபராத தொகையையும் பணியாளர்களே செலுத்த வேண்டியுள்ளது. என கூறினார்

வீடியோஸ்


ஈரோடு