ஈரோட்டில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்

82பார்த்தது
ஈரோடு மாநகரில் தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகரில், பொதுமக்கள் காலையிலே உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தங்களது தீபாவளி வாழ்துகளை பறிமாறிக்கொண்டனர்.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஒருவொருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு இனிப்பு, காரம், முருக்கு, அதிரசம் வகைகளை பறிமாறிக்கொண்டனர்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, ஈரோடு வ. உ. சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும், நேதாஜி தினசரி காய்கறி வியாபாரிகள், காய்கறி மார்க்கெட் முன்பாகவே புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகளை வெடித்து மகிழந்த வியாபாரிகள், பின்னர் வழக்கம்போல் தங்களது காய்கறி விற்பனையை தொடர்ந்தனர்.
மேலும், ஈரோட்டில் வெட்டுக்காட்டு வலசை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்– நவீனா என்ற புதுமண தம்பதியர், தங்களது தலை தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி