பவானி - Bhavani

அந்தியூர்: கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

அந்தியூர்: கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி மூலம் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் மைக்கேல் பாளையம் ஊராட்சியில், ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி மூலம் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல் தலைமை வகித்தார். கோபி கோட்ட உதவி இயக்குனர் விஷ்ணுகாந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாசலம் கலந்து கொண்டு இம்மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், கால்நடைகளுக்கு மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதுமாக 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை முதல்வர் துவங்கி வைத்துள்ளார்.

வீடியோஸ்


ஈரோடு