ஈரோடு: மீட்கப்பட்ட 17 சிற்பங்கள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

51பார்த்தது
ஈரோடு: மீட்கப்பட்ட 17 சிற்பங்கள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
கோபி அடுத்துள்ள நஞ்சை துறையாம்பாளையம் கிராமம் பவானி ஆற்றின் கரையோரத்தில் சிற்பங்கள் உள்ளதாக கோபியை சேர்ந்த மோகனபிரியா, முருகேசன் ஆகியோர் கோபி வருவாய்துறையினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் தகவல் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் பவானி ஆற்றின் கரையோரத்தில் இருந்த 17 ம் நூற்றாண்டை சேர்ந்த கஜலட்சுமி சிற்பம், வீரன் நினைவுக்கல், நாகக்கல், தட்சிணாமூர்த்தி, நாகக்கல், தலைவன், பத்ரகாளி, தட்சிணாமூர்த்தி ஆகிய 14 சிற்பங்களும், தற்காலத்தை சேர்ந்த பீடம், சிவனடியார், மாரியம்மன், கருப்பசாமி, விஷ்ணு , மாரியம்மன், 2 சிற்பங்களின் பீடம் ஆகியவையும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட 17 சிற்பங்களையும் வாணிப்புத்தூர் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி