அந்தியூர் - Anthiyur

கோடைவெயில் தொடங்கும் முன்பே ஈரோட்டில் 100டிகிரி வெயில் பதிவு

கோடைவெயில் தொடங்கும் முன்பே ஈரோட்டில் 100டிகிரி வெயில் பதிவு

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோடை வெயில் தொடங்கும் முன்பே ஈரோட்டில் 100 டிகிரி வெயில் பதிவு பொதுமக்கள் கடும் அவதி ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் பனி பொழிந்தாலும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே 95 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. எப்போதும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் பிப்ரவரி மாதத்திலேயே மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. பல்வேறு நகரங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా