கிராம மக்களிடம் அமைச்சர் முத்துசாமி பேச்சு வார்த்தை

60பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள விவசாய நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கிராம மக்களிடம் அமைச்சர் சு. முத்துசாமி பேச்சுவார்த்தை.
கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது
கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள
தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல தனியார் சிலர் நடவடிக்கை எடுத்தனர். கடந்த மாதம் நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி