வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை

62பார்த்தது
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை வாகனங்களை வழிமறித்து சாலையின் நடுவே நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு உள்ளாகினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்கு வசித்து வருகின்றன.

இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உள்ள தீவனங்களை உட்கொள்வதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றது.

மேலும் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை குறி வைத்து கரும்பு துண்டுகளுக்காக கடந்த சில நாட்களாக யானைகள் சாலையோரம் உலா வருகின்றன.

இந்நிலையில் இரவு சுமார் 7 மணி அளவில் சத்தியமங்கலம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை கரும்பு துண்டுகளை சுவைப்பதற்காக சாலையின் நடுவே காத்து நின்றது. இதனால் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருவதாகவும் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி