அந்தியூர் அருகே பேரன் , பேத்தி கொள்ளு & எள்ளு பேரன் பேத்தியோடு 105-வது பிறந்தநாள் விழா கொண்டாடிய மூதாட்டி.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அட்டவணைபுதூர், கோனமூக்கனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்துசாமி - பங்காரு என்கிற லட்சுமி அம்மாள்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் அதில் ஒரு மகன் சிறு வயதிலேயே உயிரிழந்து விட்டார், மற்றொரு மகனுக்கு திருமணம் ஆகி அவருக்கு மொத்தம் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்,
இவர்கள் மூலம் 20 பேரன் பேத்திகள், கொள்ளு மற்றும் எள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர்.
முத்துசாமி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்துவிட்டார், மேலும் இவரது ஒரே மகனும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
தற்போது அவரது மருமகளான ராதாமணியோடு (71) வசித்து வரும் நிலையில்,
பங்காரு (எ) லட்சுமியம்மாலுக்கு இன்று 105-வது பிறந்தநாள் .
மூதாட்டியின் 105-வது பிறந்த நாளை விமர்சியாக கொண்டாட நினைத்த குடும்பத்தார் இன்று தங்களது ஊரிலிருந்து பாட்டியின் ஊருக்கு வந்து கேக் வெட்டியும் மரக்கன்றை நட்டும் கொண்டாடினர்.
மேலும் அனைவரும் மூதாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் தொடர்ந்து மூதாட்டி சத்தான உணவுகளை சாப்பிட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் என அனைவரையும் வாழ்த்தினார்.