ஈரோடு: கர்நாடக மது கடத்தி வந்த 2 பேர் கைது

62பார்த்தது
ஈரோடு: கர்நாடக மது கடத்தி வந்த 2 பேர் கைது
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம், ஆசனூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட கேர்மாளம் செக் போஸ்ட் மற்றும் ஆசனூர் செக்போஸ்ட் பகுதிகளில் நேற்று கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபர்கள் இருவரை தடுத்து விசாரித்ததில் அவர்களிடம் கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. 

மேலும் விசாரணையில் அவர்களில் ஒருவர் சத்தியமங்கலம் காடகநல்லி பகுதி சேர்ந்த ராமன் (63) என்பதும் மற்றொரு நபர் கேரள மாநிலம் ஆலப்புழா தெக்கண்கொய்கில் பகுதியைச் சேர்ந்த ப்ரதீஷ் (26) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கர்நாடக மது பாக்கெட்டுகள் 15 மற்றும் 3 மது பாட்டில்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி