அந்தியூர் - Anthiyur

அரக்கன்கோட்டை: பாசனப் பகுதியில் முதல்போக நெல் அறுவடைக்கு தயார்

அரக்கன்கோட்டை: பாசனப் பகுதியில் முதல்போக நெல் அறுவடைக்கு தயார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பகுதிகளில் தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன பகுதி வயல்வெளிகள் உள்ளன. முதல் போக நெல் சாகுபடி தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாச பகுதி மற்றும் கூகலூர் கிளை வாய்க்கால் பகுதிகளில் இன்னும் ஒரு வாரங்களில் அறுவடை தொடங்க உள்ளது. பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன பகுதிகளான , சவுண்டபூர், ஆப்பக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் 25, 000 ஹெக்டேரில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை சேர்ந்தார் போல் கூகலூர் கிளை வாய்க்கால் பகுதிகளிலும் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் இட்லி குண்டு மற்றும் ஏ டி டி 39 என்னும் பெருரக நெற்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற்கதிர்கள் முக்கிய நிலையில் உள்ளதால் இதன் அறுவடை இரண்டு பகுதிகளிலும் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் விவசாயிகள் விளைவித்து அறுவடை செய்த நெல்லினை மழையில் நனையாமல் பாதுகாக்கும் பொருட்டு அரசு உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்கும் ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அறுவடை செய்யப்பட்ட நெற்களை கொள்முதல் நிலையங்களில் மழை நீரில் நனைத்து முளைக்கும் நிலையினை தவிர்க்கும் பொருட்டு மேற்கூரையுடன் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా