நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள: 3 பேர் உடல்கருகி பலி

63பார்த்தது
நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள: 3 பேர் உடல்கருகி பலி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இரண்டு இலகுரக விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். சிட்னி நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. விமானங்கள் விபத்துக்குள்ளாகி வனப்பகுதியில் விழுந்த உடன் தீ பரவி உள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி