திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "மாநிலங்களின் கல்வி உரிமையை அபகரித்து நாடெங்கும் கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் பணிகள் அமையட்டும்" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.