ஆளுநருக்கு பிடித்த வார்த்தை மன்னித்து விடுங்கள்தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "ஆளுநருக்கு தமிழ்நாடு, தமிழ்த்தாய் வாழ்த்து, திராவிடம் ஆகிய வார்த்தைகள் பிடிக்காது. ஆளுநருக்கு பிடித்த ஒரே ஒரு வார்த்தை மன்னித்துவிடுங்கள்தான். கல்லூரிகளில் சங்கி கருத்துகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்" என்று காட்டமாக கூறியுள்ளார்.