வேடசந்தூர்: பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு
வேடசந்தூர் வட்டார நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு மற்றும் நல சங்கம், தமிழ்நாடு & பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு -- பெட் காட் , தீயணைப்பு துறை சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது. கௌரவ தலைவர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். தலைவர் தில்லை சந்திரசேகர், செயலாளர் நேருமாணிக்கம் தீயணைப்பு நிலைய பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். கூரை வீடுகள், மின் கம்பங்கள் அருகே பட்டாசுகளை வெடிக்க கூடாது, வெற்று கைகளால் பட்டாசுகளை வெடிக்க கூடாது, பட்டாசுகளை வெடிக்கும் போது அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது. பொருளாளர் வெக்காளி முருகன், உறுப்பினர்கள் மகேஸ்வரன், ராமதாஸ், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.