வேடசந்தூர்: அரசு பேருந்து மோதி இரண்டு பேர் காயம், ஒருவர் பலி

85பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் இருந்து திண்டுக்கல்லிற்கு அரசு பேருந்து சென்றது. அந்த பேருந்தை வடமதுரை அருகே உள்ள குரும்ப வட்டியைச் சேர்ந்த 40 வயது செந்தில்குமார் என்பவர் ஓட்டிச்சென்றார்.

எரியோடு அருகே உள்ள தொட்டணம்பட்டி பகுதியில் பேருந்து சென்றபோது சாலையில் நடந்து சென்ற மீனாட்சி மற்றும் மாரிமுத்து ஆகிய இருவர் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பின்னர் செந்தில்குமார் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை திருப்பி எரியோடு காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றார். அப்போது காவல் நிலையம் செல்லும் வழியில் கொம்பேறிபட்டியைச் சேர்ந்த 50 வயது காளியப்பன் என்பவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த காளியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அரசு பேருந்து அடுத்தடுத்து ஏற்படுத்திய விபத்தில் இருவர் படுகாயமடைந்து ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி