அய்யலூர்: தேமுதிக நிர்வாகி குடோனில் தீ விபத்து

50பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூரில் தேமுதிக மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் வடிவேல். இவர் அய்யலூரில் செட் அமைத்து முருங்கைக்காய் வியாபாரம் செய்து வருகிறார். செட்டில் ஓலை பாய்களும் சாக்குகளும் ஏராளமாக அடுக்கி வைத்திருந்தார். கடந்த 14ஆம் தேதி இரவில் வந்த மர்ம நபர்கள் குடோனுக்கு தீ வைத்ததில் மூன்று லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆகின. இதுகுறித்து வடிவேல் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தீ வைத்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த தேமுதிக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் மற்றும் மாவட்ட பொருளாளர் திருமுருகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட வடிவேலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி