தாடிக்கொம்பு: அதிமுக கிழக்கு மாவட்ட செயல்வீரர் கூட்டம்

72பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு பகுதியில் அதிமுக கிழக்கு மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தாடிக்கொம்பு பேரூராட்சி மற்றும் அகரம் பேரூராட்சியை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது எங்கு பார்த்தாலும் சாராயம் ஆறாக ஓடுகிறது கொள்ளையடிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது அதிமுக ஆட்சியில் மழைக்காலம் வருவதற்கு முன்பே ஏரி வாய்க்கால் குளம் உள்ளிட்ட அனைத்தும் தூர்வாரப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திமுக அரசு தற்போது மழை பெய்து வரும் சூழ்நிலையில் ஏரி குளங்களை தூர்வார்கிறோம் என கண் துடைப்பு நாடகம் நடத்தி வருகின்றனர். இந்த அரசு ஒரு சில அதிகாரிகளுக்கு ஆதரவான அரசாங்கம் பொதுமக்களுக்கும் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் எதிரான அரசாக செயல்படுகிறது.

திமுக அரசின் செயல்பாடுகள் கூட்டணி கட்சிகளுக்கு உடன்பாடு இல்லாத அரசாக செயல்பட்டு வருகிறது என செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி