திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி அருகே திண்டுக்கல் - கரூர் தேசிய நான்குவழி சாலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனது மகளை பார்ப்பதற்காக பெங்களூர் நோக்கி வல்சலான்(75) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (65) தங்களது ஆல்டோ காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரை வல்சலான் ஓட்டி வந்தார். கார் கல்வார்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பு தூண் மீது அதி பயங்கரமாக மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் காரில் சிக்கிக் கொண்டனர். இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்பாகவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரில் இடிபாடுகளில் சிக்கி இருந்த கணவன் மனைவி இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கணவன் மனைவி காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.