வேடசந்தூர்: ஆட்டு சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

63பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது.

இந்த நிலையில் வரும் 31-ம்   தேதி  தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று அய்யலூரில் ஆட்டுச் சந்தை கூடியது.

அதிகாலை 2 மணி முதலே ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் சந்தையில் குவிந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் இல்லாததால் சந்தைக்கு வெளியே சாலை வரை கூட்டம் அலைமோதியது.


மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்த போதிலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.


இன்று 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு  8500 ரூபாய் வரையிலும், செம்மறி ஆடு 7000 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூபாய் 450 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல் அதிகபட்சமாக 15, 000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.


வியாபாரிகள் சேவல்களை சண்டையிட  வைத்து வாங்கி சென்றனர்.


அய்யலூர் சந்தையில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி