திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அயலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு மழை கொட்டி தீர்த்தது. இதனால் தங்கமாபட்டி மேற்கு கருஞ்சின்னானுர் பொட்டி நாயக்கன்பட்டி சுக்கா வழி பாலத்தோட்டம் குமரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. பொட்டி நாயக்கன்பட்டி செல்லும் ரயில்வே தரைப்பாலம் முழுவதும் தண்ணீரில் நிரம்பியதால் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். கருஞ்சின்னானூரில் ஆற்று ஓடை நிரம்பி வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள பாத்திரங்கள் அடித்துச் செல்லப்பட்டும் வீடு முழுவதும் சேராக இருந்ததாலும் மக்கள் சமைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனை அறிந்த அய்யலூர் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் தங்குவதற்கு வண்டி கருப்பணசாமி கோவில் மண்டபத்தை தயார் நிலையில் வைத்து கிராம மக்கள் அனைவருக்கும் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை 3: 30 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவல்.