திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சி குப்பம்பட்டியில் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் கிராமத்திற்குள் புகுந்தது. மேலும் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இதேபோல் அய்யலூர் அருகே உள்ள சுக்காவெளி கிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் 3 ஆடுகள் கோழிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. குளத்தின் கரை உடைந்து தண்ணீர் வெல்லமாக பெருக்கெடுத்து ஓடியது.