வேடசந்தூர்: குவாரியில் வேலை பார்த்த காவலாளி மரணத்தில் மர்மம்

81பார்த்தது
திண்டுக்கல், வேடசந்தூர் அருகே குருநாதநாயக்கனூரில் உள்ள அங்குவிலாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உபயோகத்தில் இல்லாத பழைய கல்குவாரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் பகுதியைச் சேர்ந்த முகுந்தராஜன் மகன் ரவி(55) என்பவர் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

வேடசந்தூர் போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இறந்த ரவியின் மனைவி மற்றும் உறவினர்கள் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் மர்மத்தை மறைப்பதற்காக மிரட்டுகிறார்கள் என்றும். காவல்துறையினர் மரணத்தை மறைக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி