வேடசந்தூர் ஒன்றியம் நாகையகோட்டை ஊராட்சி சிக்கனம் பட்டியில் எம் எல் ஏ பொறுப்பேற்ற பிறகு 47வது புதிய பகுதி நேர ரேஷன்கடை, கரையாம்பட்டியில் பள்ளி கட்டிடம் திறப்பு விழா, நாகையகோட்டை அங்கன்வாடி மையம் திறப்பு விழா, அரசு மேல்நிலைப்பள்ளி பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகள் 42 பேருக்கு சைக்கிள் வழங்கும் விழா, கோவிலூர் ஊராட்சி தங்கச்சியம்மா பட்டியில் புதிய பள்ளி கட்டிடம், ராமநாதபுரத்தில் புதிய பயணியர் நிலைக்குடைக்கு பூமி பூஜை வெள்ளைய கவுண்டனூரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா, பாலப்பட்டி ஊராட்சி புதுச்செட்டியூரில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட பூமிபூஜை ஆகிய நிகழ்ச்சிகளில் எம் எல் ஏ காந்திராஜன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் ஒன்றிய குழு தலைவர் சௌடீஸ்வரி கோவிந்தன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், குமரன், மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி ராமச்சந்திரன், தாமரைச்செல்வி முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூபதிமாரிமுத்து, நாகையகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்வடிவு இளங்கோவன், எரியோடு பேரூர் செயலாளர் செந்தில்குமார் உட்பட ஏராளமான திமுகவினர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.