குஜிலியம்பாறை அருகே இராமகிரி நரசிங்க பெருமாள் கோவில் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்தபடி சென்றது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த நிலை அதிகாரி ஜேம்ஸ் அருண் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் கருவி மூலம் நகர முடியாமல் சுருண்டு படுத்திருந்த 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். ராமகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மலையடி வார பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து காட்டாற்று வெள்ளத்தில் மலை பாம்பு அடித்து வரைப்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.