திண்டுக்கல்: எம். ஆர். பி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கு இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்
மூலம் தேர்வு செய்யப்பட்ட 7243 செவிலியர்களின் சுமார் 6000 பேர் மட்டுமே இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் நோயாளிகள் செவிலியர் விகிதாசாரப்படி தமிழக முழுவதும் சுமார் 23 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இந்நிலையில் தமிழக முழுவதும்
எம் ஆர் பி செவிலியர் சங்கத்தினர்,
தேர்தல் வாக்குறுதியின் படி எம்ஆர்பி செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்,
தமிழக முழுவதும் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி கால முறை ஊதியம் வழங்க வேண்டும்,
தற்பொழுது ஆலமரம் ஊதியம் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்ட 1300 செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு எம் ஆர் பி செவிலியர்கள் சங்க மாவட்ட தலைவர் ரோஸ் தனம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி