வேடசந்தூர்: தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணி அளவில் ஆத்துமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 1. விற்பனையாளர்களுக்கு விதிக்கப்படுகின்ற கூடுதல் அபராத தொகை நீக்க கோருதல். 2. விற்பனையாளரின் சொந்த ஊர் அருகிலேயே பணியாளர் பணி அமர்த்த கோரிக்கை 3. கட்டுப்பாடற்ற பொருட்களை சந்தையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ய வற்புறுத்துவதை நிராகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட போராட்டக் குழு தலைவர் சண்முகவேலு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆர். கணேசன், ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய துணை தலைவர் தியாகராஜன் நன்றியுரை ஆற்றினார்.