வேடசந்தூர் - Vedasandur

குஜிலியம்பாறை: வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 23.40 லட்சம் நிதி

குஜிலியம்பாறை: வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 23.40 லட்சம் நிதி

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பேரூராட்சி சார்பில் குஜிலியம்பாறை பேருந்து நிலையத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி, பயணிகளுக்கான கழிப்பறை கட்டுதல், ஆலம்பாடி ஊராட்சியில் சில்லுக்கவுண்டன்பட்டி குளத்தை தூர்வாருதல் ஆகிய பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்கு முறையே ரூ. 11.70 லட்சம், ரூ. 6.70 லட்சம், ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 23.40 லட்சத்தை செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், சமூக பங்களிப்பு நிதியாக வழங்குகிறது.  இந்த நிதி அளிப்பு நிகழ்ச்சி கரிக்காலியில் உள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செட்டிநாடு ஆலைத் தலைவர் வி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். மனித வள மேம்பாட்டு அதிகாரி ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். பாளையம் பேரூராட்சிக்கான நிதி ரூ. 18.40 லட்சம் பேரூராட்சித் தலைவர் பழனிச்சாமியிடமும், சில்லுக்கவுண்டன்பட்டி குளத்துக்கான நிதி ரூ. 5 லட்சம் வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகனிடமும் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా