வேடசந்தூர் - Vedasandur

வேடசந்தூர்: பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

வேடசந்தூர்: பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த ஜி. நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி. இவரது மனைவி பாப்பாத்தி (55). இவா் நவாமரத்துப்பட்டிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் கேத்தம்பட்டி நோக்கி புதன்கிழமை காலை நடந்து சென்றாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் 2 இளைஞா்கள் வந்தனா். பாப்பாத்தி அருகே மெதுவாக வாகனத்தை நிறுத்தி, வேடசந்தூா் செல்வதற்கு அவா்கள் வழி கேட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த நபா், பாப்பாத்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா். இதில் காயமடைந்த பாப்பாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுதொடா்பாக, வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా