வேடசந்தூர்: துணை முதல்வருக்கு அய்யர்மடத்தில் உற்சாக வரவேற்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்டத்தின் நுழைவு பகுதியான அய்யர்மடத்தில் திண்டுக்கல் மாவட்ட திமுகவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாநில துணை பொது செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான அர. சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏவுமான ஐ. பி. செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏவும், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவருமான எஸ். காந்திராஜன், வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா, சாமிநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கணேசன், ஹரிஹரசுதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், பேரூர் செயலாளர்கள் கார்த்திகேயன் (வேடசந்தூர்), செந்தில்குமார் (எரியோடு), கணேசன் (வடமதுரை), வேடசந்தூர் ஒன்றிய குழு தலைவர் சௌடீஸ்வரி கோவிந்தன், துணைத் தலைவர் தேவசகாயம், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.