திண்டுக்கல், நாகல்நகர், ரவுண்டானா அருகே இன்று சாலையில் சென்று கொண்டிருந்த நபருக்கு திடீரென வலிப்பு வந்து போராடிக் கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் காங்கேயன் பொதுமக்கள் உதவியுடன் அவருக்கு முதலுதவி செய்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.