வேடசந்தூர்: குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முற்றுகை

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் வைவேஸ் புரத்தைச் சேர்ந்த வென் ஒருவர் திருமணமாகி திண்டுக்கல் சென்று விட்ட நிலையில் அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளராக பணி கிடைத்தது. இவர் பல்வேறு கிராமங்களில் பணியாற்றி வந்த நிலையில் தனது பிறந்த கிராமத்திலேயே பணி கிடைத்தது. 14 ஜாதியைச் சேர்ந்த மக்கள் வசித்து வரும் வைவேஸ்வரத்தில் பணிக்கு வந்த இவர் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு குழந்தையை பாத்ரூமில் தண்ணீருக்குள் அமர வைத்து கொடுமைப்படுத்தியதால் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. குழந்தையின் தாத்தா சத்துணவு அமைப்பாளர் இடம் கேள்வி கேட்ட பொழுது அவரைப்பற்றி எரியோடு போலீஸ் நிலையத்தில் எனக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று புகார் அளித்தார். மேலும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தையை அங்கன்வாடி மையத்திற்குள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் குழந்தைகளிடம் கொடூரமாக நடந்து கொள்வதால் எங்கள் கிராமத்திற்கு அங்கன்வாடி அமைப்பாளரை மாற்ற வேண்டும் என கோரி வேடசந்தூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை திமுக அதிமுக பிரமுகர்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி