வேடசந்தூர்: நரிக்குறவர் காலனியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

52பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், இ. சித்துார் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு. ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார். இ. சித்துார் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு வசிக்கும் 31 குடும்பங்களுக்கு வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டா நிலங்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு இன்று கள ஆய்வு செய்யப்பட்டது. சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது. வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், குமரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி