வேடசந்தூர் குங்குமகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள நாகம்மாள் கோவிலில் திண்டுக்கல் அபிராமி அம்மன் பக்தர்கள் பாதுகாப்பு குழுவின் சார்பில் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீசார் கோவிலில் சாமி கும்பிட வந்த பெண்கள், ஆண்கள் என 70 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
இதில் அபிராமி அம்மன் பக்தர்கள் குழுவைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து, இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் திண்டுக்கல் ராஜா, கோம்பைகணேசன், அய்யலூர் சதீஷ் ஆகிய ஐந்து பேரை கடந்த ஏழாம் தேதி இரவு கைது செய்து பல்வேறு மாவட்டங்களில் சிறைகளில் அடைத்து இருந்தனர். அவர்கள் 10 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் தற்போழுது ஜாமீன் கிடைத்து வெளியில் வந்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் தாடிக்கொம்பு வினோத்ராஜ், நாகேந்திரன் ஆகிய இருவரை கைது செய்து தேனி சிறையில் அடைத்துள்ளனர். தற்போழுது வடமதுரையை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். சாமி கும்பிட சென்ற இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக இந்து முன்னணியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.