வேடசந்தூர் அருகே உள்ள அய்யர்மடம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்து வயது 45, சசிகலா வயது 30 ஆகியோர் கணவன் மனைவி. இவர்களுக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் சசிகலாவும் ஆனந்தும் தாக்கப்பட்டு, ஆனந்தின் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தாகவும் இருவரும் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.