வேடசந்தூர்: கத்தியை காட்டி மிரட்டி தாலி செயின் பறிப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள இல்லாம நாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் வயது 45 இவரது மனைவி ராஜலக்ஷ்மி வயது 40. இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பில்லம நாயக்கன்பட்டியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். மானா மூனா கோவிலூர் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ராஜலட்சுமி அணிந்து இருந்த 2 1/4 பவுன் தாலிக்கொடி மற்றும் தங்கத்தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து ராஜலட்சுமி வடமதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.