வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி செல்லும் தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. பஸ் அய்யனார் நகர் தேசிய நான்கு வழிச்சாலையின் பாலத்தின் அடியில் செல்லும் பொழுது சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த அய்யனார் நகரை சேர்ந்த 33 வயது முருகேசன் என்பவருக்கு சொந்தமான 12 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டின் மீது மோதி நீண்ட தூரம் இழுத்துச் சென்றதில் ஆடு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது பஸ் ஓட்டுநர், நடத்துனர் பஸ் உரிமையாளரிடம் பேசியதில் இழப்பீடு தர மருத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.