குஜிலியம்பாறை அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தலைமையில் பூத் கிளை கமிட்டி அமைப்பது தொடர்பான கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கழக அமைப்புச் செயலாளர் ஆசைமணி அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் பிரபுராம் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் பரமசிவம் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி பாளையம்பேரூர் செயலாளர் மணிமாறன் வடமதுரை நகர செயலாளர் பி.டி.ஆர். பாலசுப்ரமணியம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் வினோத் கலந்துகொண்டனர்.
பின்னர் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் பேசியபோது, இளைஞர்களின் வாக்குச் சதவீதம் 35% உள்ளது. அதைப் பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் செயல்பட வேண்டும். மேலும், பூத் ஒன்றுக்கு புதிதாக இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் 25 உறுப்பினர்களை இணைப்பதற்கு வேலை செய்ய வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.