வேடசந்தூர் தாலுகா வடமதுரையில் தென்னம்பட்டி பிரிவு நான்கு சாலையில் இரு சக்கர வாகனத்தில் கெச்சாணிப்பட்டியைச் சேர்ந்த 20 வயது பிரேம்குமாரும் அவருடைய அத்தை 35 வயது மீனா என்பவரும் நான்கு வழிச்சாலையை கடந்தனர். அப்பொழுது உடுமலைப்பேட்டை காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது கிருஷ்ணபிரசாந்த், அவருடைய மனைவி 23 வயது சண்முகப்பிரியா இருவரும் திருச்சியை நோக்கி காரில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பிரேம்குமார் அவருடைய அத்தை மீனா, காரில் வந்த சண்முகப்பிரியா ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்துக்கான சிசிடிவி காட்சி வைரலாகி வருகின்றது.