வேடசந்தூர்: கொட்டகையை இடித்து தள்ளிய கல்குவாரி தரப்பினர்

82பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துர் தொகுதி குருநாதநாயக்கனூர் அருகே உள்ள கரட்டுபட்டியை சேர்ந்தவர் சக்திவேல், விவசாயி.

இவர் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வருகிறார்.

சக்திவேலின் இடத்தை, அவரது தோட்டத்தின் அருகே செயல்படும் கல்குவாரி உரிமையாளர் மணிக்கண்ணன் தரப்பினர் விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சக்திவேல் குடும்பத்தினர் நிலத்தை விற்பனை செய்ய மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் சக்திவேல் தனது தோட்டத்தில் மாடுகளை கட்டி வைப்பதற்காக ஆஸ்பெட்டாஸ் கொட்டகை அமைக்க முயன்றார்.

அப்போது மணிக்கண்ணன் தரப்பினர் நிலத்தை அவர்களுக்கு விற்பனை செய்யாத ஆத்திரத்தில், கொட்டகை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சக்திவேல் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சக்திவேல் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதனைத்தொடர்ந்து போலீசார் சக்திவேல் தனது தோட்டத்தில் ஆஸ்பெட்டாஸ் கொட்டகை அமைக்க அனுமதி அளித்தனர்.

அதன்பின்னர் சக்திவேல் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து இரண்டு அஸ்பெட்டாஸ் கொட்டகை அமைத்து மாடுகளை கட்டி வந்தார்.

எனவே தற்போது கொட்டகையை இடித்து தள்ளிய கல்குவாரி தரப்பினர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி