ஒரு வண்டின் விலை ரூ.1 கோடி? ஏன் தெரியுமா?
அமெரிக்கா மற்றும் நைஜீரியா பகுதிகளில் அதிகம் வாழக்கூடிய ஸ்டாக் பீட்டில் என்கிற வண்டு இனங்கள் ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி ரூபாய் வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது. குணப்படுத்த முடியாத நோய்களுக்குக் இந்த வண்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக இதன் தேவை அதிகமாகி இருக்கிறது. கடும் குளிரை தாங்க முடியாத இவை, வெப்பமான இடங்களில் வளர்கின்றன. மேலும் அழுகிய மரங்கள், பழங்களை உண்டு குப்பைகளில் வாழ்கின்றன.